JAYA VERDICT ERROR

JAYA VERDICT ERROR
CLICK here for SC verdict on SASIKALA and others

Formula error in Tamil version

 குமாரசாமி செய்து உள்ள கணித கூட்டல் பிழை மட்டுமல்ல சமன் பாட்டிலும் பெரிய பிழை உள்ளது ..!!அதை தெரிந்து கொள்ள இந்த படத்தின் விபரங்களை பார்த்து புரிந்து கொள்ள வேண்டும். "கையிருப்பு நிகர வருமானம்"  [NET  INCOME ] என்பது தான் சம நிலையற்ற கூடுதல் சொத்து மதிப்பு [D A Value ] கணக்கிட  உதவும் முக்கிய காரணி . ஆனால் நீதிபதி  "மொத்த நிதி ஆதாரம்"[ Total  Source of  money]   என்கிற தவறான  ஒன்றை வைத்து கொண்டு மொத்த  கணக்கையும்  சமன் பாட்டில்   பயன்படுத்தி  தவாறன  விடையை  பெற்று உள்ளார்  "கையிருப்பு நிகர வருமானம்"  [NET  INCOME] என்பதற்கும் "மொத்த நிதி ஆதாரம்"[ Total  Source of  money]     என்பதற்கும்  உள்ள அடிப்படை வித்யாசம் கூட தெரியாமல் தவறான  சமன் பாடு [FORMULA ]  மூலம் தவறான  விடை தந்து மொத்த மதிப்பையும் பிழையுடன் செய்து உள்ளார் . கூடுதல் சொத்து மதிப்பு [D A Value ] சதவீதம் என்பது நிகர வருமானத்தில் எவ்வளவு கூடுதல் விகிதாசாரம் என்பது தான் வழக்கே தவிர   "மொத்த நிதி ஆதாரம்"[ Total  Source of  money]  இல் இருந்து  எவ்வளவு என்பதல்ல ..!! "மொத்த நிதி ஆதாரம்"[ Total  Source of  money]   என்பது சட்டப்படி உள்ள வருமானம் உடன்  வங்கி கடனும்  சேர்ந்த ஒன்று .ஏன்  தெரிந்தவர்களிடம் வாங்கும்  தனியார் கடன்  ,கைமாற்று கடன்  ,தனியார் பங்கு முதல்  , என  அனைத்தும் சேர்ந்தது தான். ஆனால் வங்கி கடன் மட்டுமே சட்ட ரீதியான வெளி முதலாக  எடுத்து கொள்ளப்படும் [சட்ட ரீதியாக] மற்றவை அனைத்தும் சட்ட ரீதியான  முதலாக இருந்தாலும் அவை காணக்கில் எடுத்து கொள்ளப்படா .. காரணம்  அவை முறையான  வெளி முதல் [ External  Borrowings ] ஆக இருக்க முடியாது ,என்பது சொத்து குவிப்பு வழக்கில் உள்ள பிரதான சட்ட பிரிவு சொல்லும் சட்ட விதியாகும்.. கம்பெனி [company Law] சட்டப்படி வேண்டுமானால்  அது மாதிரி  "வெளி முதல்" [ External  Borrowings ]  என்பது ஏற்று கொள்ளப்படும். அனால் சொத்து  வழக்கில்  அதை எந்த நீதி மன்றமும் ஏற்காது. காரணம்  வங்கி கடன் என்பது  அரசாங்க வழிமுறைகள் படி நெறி படுத்தப்பட்ட முறையில் வழங்கப்படுவதால்  அதை மட்டும் "மொத்த நிதி ஆதாரம்"[ Total  Source of  money]   என்பதை கணக்கிட  ஒரு அளவு கோலாக நீதி மன்றம் ஏற்று கொள்ளுகிறது.
ஆனால்  இதில்  பிழை எங்கு வருகிறது என்றால் "கையிருப்பு நிகர வருமானம்"  [NET  INCOME]  என்பதற்கும் "மொத்த நிதி ஆதாரம்"[ Total  Source of  money]     என்பதற்கும்  உள்ள அடிப்படை வித்யாசம் கூட தெரியாமல் தவறான  சமன் பாடு [FORMULA ]  மூலம் தவறான  விடை தந்து உள்ளது  தான் . "மொத்த நிதி ஆதாரம்"[ Total  Source of  money]  என்கிற ஒன்று எதற்காக வருகிறது என்றால்  இவ்வளவு சொத்து வாங்கும் அளவுக்கு அவருக்கு சட்ட படியான  நிதி ஆதாரம் உள்ளதா  என்று கணக்கிட மட்டுமே பயன்படுகிறது . இந்த வழக்கின்  முக்கிய சாரம்சமே  தனது வருமானத்துக்கு அதிகமாக எவ்வளவு சதவீதம் சம நிலையற்ற கூடுதல் சொத்து மதிப்பு [D A Value ]  உள்ளது என்பது தானே ஒழிய  தனது  "மொத்த நிதி ஆதாரம்"[ Total  Source of  money]   க்கு அதிகமாக எவ்வளவு சதவீதம் என்பதல்ல என்கிற ஒரு எளிய உண்மையை நீதிபதி எவ்வாறு மறந்து விட்டு தவறான  சமன் பாட்டில் விடையை தவறாக போட்டு  தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி உள்ளார்.இது வரை  முன்னர்  பேசப்பட்ட தீர்ப்பின் பிழைகள் அனைத்தும் கூட்டல் கழித்தல்  சம்பதபட்டவை .. ஆனால், இது சமன்பாட்டு  பிழை [FORMULA  error ] என்பதை உணர்ந்து கொண்டால் இந்த அடிப்படையிலும் "சம நிலையற்ற கூடுதல் சொத்து மதிப்பு" Disproportionate  Assets Value  [D A Value ] சதவீதம் எவ்வளவு வித்யாசப்படும் என்பதை புரிந்து கொள்ளலாம் ..


No comments :

Post a Comment